படைப்புழு தாக்கத்தை ஒழிக்க பிரதமர் தலைமையில் ஆலோசனை

படைப்புழுவின் தாக்கத்தை ஒழிப்பதற்கு நாடு முழுவதும் துரித வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

படைப்புழு ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதியை பெற்றுக்கொடுக்குமாறும் நிதியமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் (21) நடைபெற்ற பாராளுமன்ற குழுக் கூட்டத்திலேயே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

இதன்படி படைப்புழு தாக்கத்தை ஒரு தேசிய அனர்த்தமாக கருதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஐ.தே. க பாராளுமன்ற குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

படைப்புழுவின் தாக்கத்தை ஒழிப்பதற்காக இராணுவத்தின் உதவியை பெறுவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என தெரிவித்த அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா இப்புழுவின் தாக்கம் காரணமாக சுமார் 40, 000 ஹெக்டேயர் நிலத்தில் பயிரிடப்பட்ட சோளம் பாதிக்கப்பட்டது என தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனால் வருடாந்தம் கிடைக்கும் அறுவடையில் 20 வீதத்தை இழக்கவேண்டியிருக்கின்றது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

Wed, 01/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை