ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி மீண்டும் போராட்டம்

ரூ. 700 சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு

ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கங்கள் இன்று (27) 700ரூபாய்க்கு கையொப்பம் இடுவதை ஆட்சேபிக்கின்றோம் எனதெரிவித்துபொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியை மறித்து செல்வகந்தை பிரதேசத்தில் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போக்குவரத்து தடையை ஏற்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்று காலை முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் கெம்பியன், பெற்றசோ, செல்வகந்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், எதிர்ப்பு கோஷங்களையும் சுலோகங்களையும்ஏந்தியவாறுகலந்து கொண்டனர்.

இதன்போது ஹட்டன் தொடக்கம் பலாங்கொடை வரையிலான பிரதான வீதியின் போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக நாளை (28) கையொப்பமிடவுள்ள 700 ரூபாய் அடிப்படை சம்பளம் எமக்கு வேண்டாம் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டகாரர்கள் வாக்குறுதி வழங்கியவாறு ஆயிரம் ரூபாய் சம்பளமே எமக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் எனவும் கோரிக்கையை முன்வைத்தனர்.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக ஆயிரம் ரூபாவை பெற்றுத் தருவேன் என தீக்குளிக்க முற்பட்ட அமைச்சரும், ஆயிரம் ரூபாவை வலியுறுத்திய தொண்டமானும் கூட இன்று 700 ரூபாய் அதிகபடியான சம்பளம் எனவும், 40 வீத சம்பள உயர்வு வரலாறு காணாத ரீதியில் இம்முறை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்து ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர எத்தனிக்கின்றனர். 

ஆனால் இன்றைய வாழ்க்கை செலவு அடிப்படையில் 700 ரூபாய் அடிப்படை சம்பளம் என்பது ஒரு கண் துடைப்பு விடயமாகும். இந்த விடயத்தில் அரசாங்க தரப்பு பக்கத்திலும் தொழிலாளர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை வழங்கியுள்ள நிலையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம் என ஆர்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர்– ஜீ.கே. கிருஷாந்தன்)    

Sun, 01/27/2019 - 14:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை