அக்கரைப்பற்று பிரதேச செயலகம் 6ஆவது முறை சம்பியன்

அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மேசைப்பந்து சுற்றுப்போட்டி 2019இல் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சம்மாந்துறை விளையாட்டு கட்டடத் தொகுதியில் குறித்த போட்டிகள் இடம்பெற்றதோடு இதில் ஆறாவது முறையாக அக்கரைப்பற்று செயலக அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அக்கரைப்பற்று செயலக அணி சார்பில் சன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.எச். ஜுனைதீன், ஐ.எல். ஷெரீப்தீன், எம். செயின் அலி, என்.ரி. நளீம் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இத்தொடரில் அக்கரைப்பற்று செயலக அணி 2013, 2014, 2015, 2016, 2018ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதோடு இம்முறை ஆறாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 01/27/2019 - 15:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை