தென்னிந்தியாவில் நடிகர்களுக்கு தூண்டில் போடுகிறது பா.ஜ.க

சூடுபிடிக்கும் மக்களவைத் தேர்தல்

இந்திய பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தென்னிந்தியாவில் கால் பதிப்பதற்காக நடிகர்களின் ஆதரவை பெறவும், பயன்படுத்திக் கொள்ளவும் பா.ஜ.க கட்சி திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் முழுதாக 4 மாதங்கள்தான் இருக்கின்றன. காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளும் மிக தீவிரமாக இந்த தேர்தலுக்காக உழைத்து வருகின்றன.

இந்த நிலையில், தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக பா.ஜ.க வேறு சில திட்டங்களை வைத்து இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

தென்னிந்தியாவில் கால் வைப்பதற்காக நடிகர்களின் ஆதரவை பெற பா.ஜ.க கட்சி திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி தென்னிந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களில் பா.ஜ.க முக்கிய நடிகர்களை பிரசாரத்துக்குப் பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. சிலரை பிரசாரத்துக்கு மட்டுமில்லாமல் தேர்தலில் போட்டியிட வைக்கவும் பா.ஜ.க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

லோக்சபா தேர்தலில் பா.ஜ.க எப்படியாவது ஆந்திராவில் அதிக இடங்களை பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறது. இதனால் தற்போது பிரபாஸை தேர்தல் நேரத்தில் பயன்படுத்த பா.ஜ.க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பிரபாஸை பிரசாரத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், தேர்தலில் நிற்க வைக்கவும் பா.ஜ.க திட்டமிடுகிறது. பிரபாஸும் இந்த திட்டத்தில் இருப்பதாகவே தகவல்கள் வருகின்றன.

கேரளாவில் நடிகர் மோகன்லால் எப்போது வேண்டுமானாலும் பா.ஜ.க.வில் சேர்வார் என்று கூறுகிறார்கள். மோகன்லால் கடந்த ஆண்டு பிரதமர் மோடியை சந்தித்த போதே இது தொடர்பான வதந்திகள் வந்தன.

தமிழகத்தில் சில பிரபலமான நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போக நடிகர் ரஜினியை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாம் என்று பா.ஜ.க திட்டமிட்டு இருக்கிறது. தேர்தலின் போது ரஜினியை பா.ஜ.கவிற்காக பிரசாரம் செய்ய அழைக்கலாம் என்று கூறுகிறார்கள். தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருக்கும் ரஜினி இதை ஏற்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை