தலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 16 ஆட்சேபனைகளில்,ஒரேயொரு ஆட்சேபனை மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், ஏனைய அனைத்து ஆட்சேபனைகளையும் புறக்கணிப்பதற்கு தேர்தல் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இம்முறை இலங்கை கிரிக்கெட் தேர்தல் தலைவர் பதவிக்கு ஜயந்த தர்மதாச, மொஹான் டி சில்வா, கே.மதிவானன் மற்றும் சம்மி சில்வா உள்ளிட்ட நால்வர் போட்டியிடவுள்ளதாக தேர்தல் செயற்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன், உப செயலாளர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்திருந்த கிஹான் வீரசிங்க, குறித்த பதவிக்கான தகைமைகளைக் கொண்டிருக்காத காரணத்தால் அதைபுறக்கணிப்பதற்கு தேர்தல் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதிபெற்றவர்கள் தொடர்பிலான அறிவிப்பு (14) விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து டபிள்யூ.டி. சந்திர ஜயதிலக தலைமையிலான தேர்தல் செயற் குழுவினால் அறிவிக்கப்பட்டது.

இம்முறைதேர்தலில் ஏழு முக்கிய பதவிகளுக்காக 26 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் ஆறு பேரின் வேட்புமனுக்களுக்கு எதிராக ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதில் உப தலைவர் பதவிக்காக போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்திருந்த 1996 உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க மற்றும் அதே உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக விளையாடிய பிரமோத்ய விக்ரமசிங்க, கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஜயந்த தர்மதாச, ரிஸ்மன் நாரங்கொட, நளீன் விக்ரமசிங்க, சன்ஜய சேதரசெனரத் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன.

எனினும், குறித்த வேட்புமனுக்களுக்கு எதிராக விசாரணைகளின் போது எந்தவொரு எதிர்ப்புகளும் முன்வைக்கப்படவில்லை. இதனால் குறித்த ஆறு பேருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கதேர்தல் குழு தீர்மானித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக வேட்பு மனுதாக்கல் செய்திருந்த ஜயந்த தர்மதாச, மொஹான் டி சில்வா, கே.மதிவானன் மற்றும் சம்மி சில்வா உள்ளிட்ட நால்வரது வேட்பு மனுக்களையும் தேர்தல் செயற்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபால, அரசியல் ரீதியான காரணங்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியிருந்ததுடன், அவரது தரப்பில் முன்னாள் உப தலைவர்களுள் ஒருவரான மொஹான் டி சில்வா மற்றும் முன்னாள் பொருளாளரான சம்மி சில்வா ஆகியோர் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர். எனினும், தலைவர் பதவிக்குகடைசிநேரத்தில் சுமதிபாலதரப்பில் இருந்துஒருவர் மாத்திரம் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம், ரணதுங்கதரப்பில் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஜயந்த தர்மதாச மற்றும் முன்னாள் உப தலைவரான கே. மதிவாணன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளனர். இவர்களில் ஒருவர் இறுதிநேரத்தில் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள் என நம்பப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, இம்முறைகிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டியிடவுள்ளனர். ரணதுங்க தரப்பில் இருந்து முன்னாள் செயலாளரான நிஷாந்த ரணதுங்கவும்,திலங்க சுமதிபால தரப்பிலிருந்து பந்துல திசாநாயக்க, சம்மி சில்வா மற்றும் மொஹான் டி சில்வா ஆகியோர் இப்பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.

இதில் உப செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கிஹான் வீரசிங்க, குறித்த பதவிக்கான தகைமைகளைக் கொண்டிருக்காத காரணத்தால் அதைபுறக்கணிப்பதற்கு தேர்தல் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருளாளர் பதவிக்கு ரணதுங்க தரப்பிலிருந்து ரிஸ்மன் நாரங்கொடவும், நளீன் விக்ரமசிஙகவும் போட்டியிடவுள்ளதுடன், சுமதிபால தரப்பிலிருந்து லசந்தவிக்ரமசிங்க, ரவீன் விக்ரமரத்ன மற்றும் சம்மி சில்வாஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2018 முதல் 2021 வரையான 4 வருடகாலப்பகுதிக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் வேட்புமனுக்கள் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பீ.எப் மொஹமட்

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை