உலக வங்கித் தலைவர் முன்கூட்டி பதவி விலகல்

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் அடுத்த மாதம் முதலாம் திகதி பதவி விலகவுள்ளார்.

தனியார் துறையில் அவர் சேரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவணைக் காலம் முடிவடைவதற்கு மூவாண்டுக்கு முன்னரே வெளியாகியிருக்கும் அவரது பதவி விலகல் குறித்த அறிவிப்பு, சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜிம்மின் தலைமைத்துவத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் கடுமையான வறுமையை ஒழிக்க உலக வங்கி இலக்கு வகுத்துள்ளது.

அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஸ்டலீனா ஜோர்ஜிவா தற்காலிகத் தலைவராகச் செயல்படுவார் என்று வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை குறிப்பிட்டது.

ஜிம்மின் பதிவிக் காலத்தில் உலக வங்கி நிலக்கரி மின் திட்டத்திற்கான உதவியை முடிவுக்குக் கொண்டுவந்தது. இது நிலக்கரி துறையை புதுப்பிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு எதிரானதாக இருந்தது.

இது ஜிம் மற்றும் டிரம்புக்கு இடையில் முறுகலை ஏற்படுத்துவதாக அமைந்தது.

Wed, 01/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை