இஸ்ரேல் சென்ற ஈராக் அதிகாரிகளால் சர்ச்சை

ஈராக்கிய அதிகாரிகள் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டதான செய்தி ஈராக்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு எல்லை மீறியவர்களை அடையாளம் காண விசாரணை நடத்தும்படி பிரதி சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மூன்று ஈராக்கிய தூதுக் குழுக்கள் இஸ்ரேல் வந்ததாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் குறிப்பிட்டது. இது தொடர்பான விபரங்கள் இஸ்ரேல் ஊடகங்களில் பின்னர் வெளியாகின.

இஸ்ரேலை ஈராக் அங்கீகரிக்கவில்லை என்பதோடு அதனுடன் ஒரு போர்ச் சூழலையே ஈராக் பேணி வருகிறது.

ஈராக் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ஹஸன் கரீம் அல் காபி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆக்கிரம்பு பிரதேசத்திற்கு சென்றவர்களை, குறிப்பாக அவர்கள் பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாயின் அது பற்றி விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஆக்கிரமிப்பு பிரதேசத்திற்கு செல்வது அத்துமீறல் என்பதோடு அனைத்து முஸ்லிம்களுக்கும் உணர்வுபூர்வமான ஒன்றாகும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்வாக்கு மிக்க சுன்னி மற்றும் ஷயாக்கள் உட்பட 15 ஈராக்கியர்கள் இஸ்ரேல் வந்ததாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Wed, 01/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை