வனாத்தவில்லு சம்பவம்; கைதான நால்வரையும் 90 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Rizwan Segu Mohideen
வனாத்தவில்லு சம்பவம்; கைதான நால்வரையும் 90 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி-Wanathawilluwa-Explosive Incident-90 Days Detention order to Inquiry 4 Suspect

புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் வெடிமருந்து மற்றும் டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான நான்கு சந்தேகநபர்களையும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு (CID) நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் விசாரணைக்காக வந்த சிஐடி அதிகாரிகளால் குறித்த பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணை வளாகத்தில் மேற்கொண்ட சோதனையின்போது புதைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ வெடிமருந்து மற்றும் 100 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வனாத்தவில்லு சம்பவம்; கைதான நால்வரையும் 90 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி-Wanathawilluwa-Explosive Incident-90 Days Detention order to Inquiry 4 Suspect

இதனையடுத்து நேற்றைய தினம் (17) குறித்த பண்ணையின் உரிமையாளர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்

இதேவேளை, குறித்த வெடிமருந்து எவ்வகையானது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட நிபுணர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாக குற்றவியல் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Fri, 01/18/2019 - 20:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை