ஆஸி. மண்ணில் இந்தியா மீண்டும் வரலாற்று சாதனை

அவுஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 1 – 1 என சமநிலையில் முடித்து.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் போட்டியினை 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 71 ஆண்டுகால வரலாற்று சாதனையை இந்திய அணி படைத்தது.

இதனால் இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

அவுஸ்திரேலிய மண்ணில் இரு நாடுகள் நேருக்கு நேராக மோதியதில், இந்திய அணி தொடரை வெல்வது இதுவே முதன்முறையாகும்.

போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய சஹால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 114 பந்தில் 87 ஓட்டங்களை குவித்த தோனி, மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து 193 ஓட்டங்களை எடுத்திருந்ததால் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை