2019 இல் சுற்றுலா தலங்களில் இலங்கைக்கு முதலிடம்

லொன்லி பிளனட் சுற்றுலா வழிகாட்டி நிறுவனத்தினால் தரப்படுத்தல்

இலங்கை 2019ஆம் ஆண்டில் சுற்றுலா மேற்கொள்வதற்கான முதன்மை நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா வழிகாட்டி நிறுவனமான லொன்லி பிளனட் சமீபத்தில் மேற்கொண்ட தரவரிசைப்படுத்தலில் 2019ல் சுற்றுலா மேற்கொள்வதற்கான உலகின் சிறந்த நாடுகளின் வரிசையில் முதன்மையான நாடு என்ற அந்தஸ்த்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

பரந்துபட்டதேயிலைத் தோட்டங்கள், பல்லின உயிரினங்கள்மற்றும் மனதை கவரும் கடற்கரைகள் என பல்வேறுபட்ட அம்சங்கள் காரணமாக இலங்கை உண்மையிலேயே மறக்க முடியாத இடமாகவுள்ளதுஎன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலுள்ள 10நாடுகளைக் கொண்டு சிறந்த சுற்றுலா தலங்கள் தொடர்பான குறித்த பட்டியலில், இலங்கைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 2ஆம் இடத்தில் ஜேர்மனி, 3ஆவது இடத்தில் சிம்பாப்வே, 4ஆவது இடத்தில் பனாமா, 5ஆவது இடத்தில் கிர்கிஸ்தான், 6ஆவது இடத்தில் ஜோர்தான், 7ஆவது இடத்தில் இந்தோனேஷியா, 8ஆவது இடத்தில் பெலாருஸ், 9ஆவது இடத்தில் சாவோ டொமே தீவுகள், 10ஆவது இடத்தில் பெலிஸ் நாடும் பட்டியலிடப்பட்டுள்ளன.

பல்லின அனுபவங்கள், சிறப்பான உணவு மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலா துறை என்பன தொடர்பில் கருத்திற்கொண்டு, தெற்காசிய நாடான இலங்கை இப்பட்டியலின் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mon, 01/14/2019 - 15:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை