Hutch அனுசரணையில் இராணுவ தட கள விளையாட்டுப் போட்டி நிகழ்வு

RSM
HUTCH அனுசரணையில் இராணுவ தட கள விளையாட்டுப் போட்டி நிகழ்வு-HUTCH Army Athletics Championship

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் ஆதரவளித்து வருகின்றது

இலங்கையில் மொபைல் தொலைதொடர்பாடல்கள் சேவைகளை வழங்குவதில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற HUTCH, அண்மையில் சுகததாச அரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிவடைந்த 55 ஆவது ‘இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான தட கள விளையாட்டுப் போட்டி’ நிகழ்விற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அனுசரணை வழங்குவதற்கு இலங்கை இராணுவத்துடன் கைகோர்த்துள்ளது. இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் நிறைவு வைபவத்தின் போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.

HUTCH அனுசரணையில் இராணுவ தட கள விளையாட்டுப் போட்டி நிகழ்வு-HUTCH Army Athletics Championship

3 தினங்கள் கொண்ட இந்த வருடாந்த போட்டி நிகழ்வானது பல்வேறு தட கள விளையாட்டுக்களை உள்ளடக்கியுள்ளதுடன், இராணுவத்தின் அனைத்து 24 படைப்பிரிவு கட்டளையகங்களையும் சார்ந்த 900 வரையான தட கள வீரர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர். இப்போட்டியின் போது தட கள வீரர்களால் 2 புதிய தேசிய மட்ட சாதனைகளும், 12 புதிய போட்டி மட்ட சாதனைகளும் மற்றும் 4 புதிய இராணுவ தட களப் போட்டி மட்ட சாதனைகளும் நிலைநாட்டப்பட்டுள்ளன. சர்வதேச தட களப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ள 20 இற்கும் மேற்பட்ட தேசிய மட்ட தட கள வீரர்கள் நிகழ்வை நேரடியாக கண்டு களித்ததுடன், நாட்டில் இன்று மிகவும் பெயர்பெற்ற மற்றும் வளர்ந்து வருகின்ற இராணுவ தட கள வீரர்களும் அவர்களுடன் இணைந்து நிகழ்வை கண்டுகளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

HUTCH அனுசரணையில் இராணுவ தட கள விளையாட்டுப் போட்டி நிகழ்வு-HUTCH Army Athletics Championship

இலங்கை ஆயுதப் படைகளால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் அடங்கலாக இலங்கையில் பிரபலமான உள்நாட்டு விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனம் என்ற நன்மதிப்பை HUTCH கட்டியெழுப்பியுள்ளது. வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற இந்த விளையாட்டு நிகழ்விற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இலங்கை இராணுவத்துடன் பங்காளராக இணைந்துள்ளதன் மூலமாக, உள்நாட்டில் விளையாட்டுத் துறையிலுள்ள திறமைசாலிகளை வளர்த்து, அவர்கள் தமது தட களத் திறமைகளை நிரூபித்து, வெளிக்காண்பிப்பதற்கு களம் அமைத்துக் கொடுப்பதில் HUTCH தனது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டைத் தொடர்ந்தும் பேணிவருகின்றது.

3 தினங்களாக இடம்பெற்ற போட்டி நிகழ்வின் முடிவில், நடப்பு வெற்றியாளர்களான இலங்கை மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர்கள் படைப் பிரிவானது ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக வலம் வந்ததுடன், இலங்கை பீரங்கிப் படைப்பிரிவு மற்றும் கெமுனு வோச் படைப்பிரிவு ஆகியன முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன. பெண்கள் பிரிவில் நடப்பு வெற்றியாளர்களான 4(V) SLAWC படைப் பிரிவு மீண்டும் ஒரு முறை உச்ச ஸ்தானத்தை தனதாக்கியுள்ளது. ஏராளமான தட கள வீரர்கள் தமது பிரத்தியேக மற்றும் இப்போட்டி மட்டத்தில் முன்பு நிலைநாட்டியிருந்த சாதனைகளை முறியடித்துள்ளனர். ஆண்களுக்காக 4X200 மீ அஞ்சலோட்டப் போட்டியில் 1:24:03 என்ற நேரக் கணக்கிலும், ஆண்களுக்கான 4X800 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 7:27:17 என்ற நேரக் கணக்கிலும் இலங்கை மட்டத்தில் புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளமை இந்நிகழ்வில் விசேட அம்சமாக அமைந்துள்ளதுடன், இந்த இரு சாதனைகளையும் இலங்கை மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர்கள் படைப் பிரிவே நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

HUTCH அனுசரணையில் இராணுவ தட கள விளையாட்டுப் போட்டி நிகழ்வு-HUTCH Army Athletics Championship

HUTCH Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஒட்டுமொத்த வரலாற்றை எடுத்துக் கொண்டால், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை ஈட்டியுள்ள நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை இலங்கை இராணுவம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. ஆயுதப் படைகளின் விளையாட்டுத்துறையை உச்சத்தில் எடுத்துச் செல்வதற்கு இந்த தட கள வீரர்களுக்கு அனுசரணை வழங்குவதையிட்டு HUTCH பெருமை கொள்கின்றது. இலங்கையில் தலைசிறந்த விளையாட்;டு திறமைசாலிகளை வெளிக்கொணர்ந்து, விருத்தி செய்யும் எமது தனித்துவமான அணுகுமுறையை நாம் முன்னெடுத்து வருவதுடன், இவர்களின் சாதனைகள் மூலமாக எமது நாடும் நன்மை பெற முடியும்,” என்று குறிப்பிட்டார்.

Mon, 01/14/2019 - 15:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை