சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் திருத்தம்

ஜனாதிபதி நியமித்த நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலத்தில் இலங்கை சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்துக்குத் திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாக அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நளீன் பண்டார ஜயமஹ கூறினார். நேற்று தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கை -சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒப்பந்தமாகும். அவ்வொப்பந்தம் குறித்து அரசியல் கட்சிகள் வர்ணக் கண்ணாடிகள் கொண்டு பார்த்து பெரும் பீதியை உருவாக்கியுள்ளார்கள். இதுதான் அதிலுள்ள தவறாகும்.

ஆனால், நாம் இந்த ஒப்பந்தத்துக்கு ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவர வேண்டுமென்றால், அதற்கும் தயார். ஜனாதிபதியும் இது குறித்து விடயங்களை ஆராய நிபுணர்குழுவொன்றை நியமித்துள்ளார். அக்குழுவின் அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. அதில் பரிந்துரைகள் காணப்படுகின்றன. நாம் அவற்றைக் கருத்திற்கொண்டு இந்த ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளோம் என பிரதியமைச்சர் மேலும் கூறினார்.

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை