நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்தார் பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்.பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தெரேசா மே வெற்றி பெற்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டன் வெளியேறுவதற்கு 52 வீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துக் கொள்ள வேண்டிய எதிர்கால திட்டங்கள் குறித்த செயல்திட்ட அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் நடத்தினார்.

இதனால் அவருக்கு எதிராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 48 எம்.பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதையடுத்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தம் உள்ள 200க்கு 117 என்றும் எண்ணிக்கையில் வாக்குகளை பெற்று பிரதமர் தெரேசா மே வெற்றி பெற்றார்.

பிரதமர் மீது பாராளுமன்ற கட்சி நம்பிக்கை வைத்திருப்பதையே இந்த வாக்கெடுப்பின் முடிவு காட்டுவதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடி தெரிவித்தார். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த தெரேசா மே, “எதிர்கட்சிகளால் நெருக்கடி வந்தாலும் 2022 ஆண்டு நடைபெறும் தேர்தல் வரை பதவி விலகும் எண்ணம் இல்லை” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனினும் அவருக்குக் கிடைத்திருக்கும் வெற்றி வரும் ஓராண்டுக்கு அவர் கட்சிக்குள் எவ்வித எதிர்ப்புமின்றிச் செயல்படுவதற்கு வழிவிட்டுள்ளது.

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை