சூரியனின் அற்புத படம் வெளியீடு

இதுவரை இல்லாத அளவு சூரியனுக்கு மிக நெருங்கிய நாசாவின் பாக்கர் சூரிய விண்கலம் அதன் தரவுகளை அனுப்பியுள்ளது. இதில் சூரியனில் இருந்து ஆற்றல் வாயு அல்லது பிளாஸ்மா வெளியேறும் புகைப்படமும் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தல் தெரியும் ஒளிரும் புள்ளி மிகத் தொலைவில் உள்ள வியாழன் கிரகமாகும்.

கடந்த நவம்பர் 8 ஆம் திகதி சூரியனில் இருந்து 27.2 மில்லியன் கிலோமீற்றர் நெருங்கியபோதே இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படம் விண்கலத்தி தடிப்பமாக பாதுகாப்பு கேடகத்திற்கு பின்னால் இருந்தே எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூரியனின் வெளிப்புற சூழல் மர்மங்கள் குறித்து ஆய்வு நடத்தவே கடந்த ஓகஸ்ட் மாதம் இந்த விண்கலம் விண்ணில் அனுப்பப்பட்டது.

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை