ஜெர்மனி வீதியில் சொக்லெட் ஆறு

ஜெர்மனி வீதி ஒன்றில் சொக்லெட் ஆறாக ஓடியதால் போக்குவரத்து தடைப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொக்லெட் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் தொட்டி ஒன்றில் இருந்து ஒரு தொன் சொக்லெட் மேற்கு நகரான வெஸ்டொன் வீதியில் கொட்டியதை அடுத்து அந்த வீதி மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு கொட்டிய திரவ சொக்லெட் உடன் கட்டியாகியுள்ளது. இதனால் சுமார் 10 சதுர மீற்றர் பகுதி சொக்கலேட்டால் மூடப்பட்டதோடு 25 தீயணைப்பு படையினர் மண்வாரி கொண்டு அதனை அகற்றியுள்ளனர்.

சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே களஞ்சிய தொட்டியில் இருந்த சொக்லெட் இவ்வாறு வீதியில் கொட்டி இருப்பதாக அந்த சொக்லெட் உற்பத்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதோடு புதன்கிழமை வழக்கமான உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை