இந்திய கிரிக்கெட் சபை வழக்கு செலவு பாகிஸ்தான் மீது

Azaff Mohamed
இந்திய கிரிக்கெட் சபை வழக்கு செலவு பாகிஸ்தான் மீது-Pakistan Cricket Board to Settle India Cricket Board Case Fee

சர்வதேச கிரிக்கெட் சபை உத்தரவு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் சபையினால் தொடரப்பட்ட வழக்கில் இந்திய கிரிக்கெட் சபைக்கு சாதகமான முடிவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 30 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலமை காணப்படுகின்ற நிலையில் அதன் தாக்கம் கிரிக்கெட் போட்டிகளிலும் தாக்கம் செலுத்த தவறவில்லை.

இரு அணிகளும் ICC யினால் நடாத்தப்படும் உலகக்கிண்ண தொடர்களில் மாத்திரம் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி இந்திய அணியுடனான தொடர்களில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த போதிலும் இந்திய கிரிக்கெட் சபை தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருகின்றது.

2015 முதல் 2023 வரை பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற ஏற்பாடாகியிருந்த தொடர்களில் விளையாட இந்திய கிரிக்கெட் சபை மறுப்புத் தெரிவித்ததை தொடர்ந்த இதன் மூலம் தமக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்திய கிரிக்கெட் சபைக்கெதிராக ICCயில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

எனினும் இவ்வழக்கு ICCயினால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் சபையினால் பதில் வழக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கெதிராக தொடரப்பட்டது.

அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் தொடரப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கின் செலவீனங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

அந்த வழக்கின் முடிவாக இந்திய கிரிக்கெட் சபைக்கு ஏற்பட்ட செலவில் 60 வீத்தத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செலுத்த வேண்டும் என்பதுடன் வழக்கு நிர்வாகத்தில் ஏற்பட்ட செலவில் 40 வீதத்தை இந்திய கிரிக்கெட் சபை செலுத்த வேண்டும் எனவும் ICC உத்தரவிட்டுள்ளது.

Sat, 12/22/2018 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை