எட்னா எரிமலையால் சிசிலியில் பூகம்பம்

ஐரோப்பாவில் அதிகம் இயங்கி வரும் இத்தாலியின் எட்னா எரிமலையைச் சூழவுள்ள சிசிலியில் ஏற்பட்ட 4.8 ரிச்டர் அளவு பூகம்பத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  

எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை தொடக்கம் குமுற ஆரம்பித்ததை அடுத்து தொடர்ந்து அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு வருவதோடு நேற்று இடம்பெற்ற இந்த புதிய பூகம்பத்தில் சில கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. எரிமலை கக்கும் சாம்பல் புகை அருகில் உள்ள கிராமங்களை மூடியிருப்பதோடு கடானியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

கடும் சீற்றத்துடன் காணப்பட்டும் எட்னா எரிமலையிலிருந்து லாவா குழம்புகள், தீ சுவாலை போன்று வெளியேறி வருகிறது.

Thu, 12/27/2018 - 09:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை