வடக்கில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பை உடன் நிறுத்த கோரிக்கை

தமிழர்களின் வரலாற்றை கண்டு கொள்ளாதும், உணர்வுகளை மதிக்காமலும் தொல்லியல் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், வனவள திணைக்களம் ஆகியன வடக்கில் மேற் கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு, வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எழுத்துமூலம் அனுப்பி வைத்துள்ள  கோரிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:  

தொல்லியல் திணைக்களத்தின் அத்து மீறிய செயற்பாடுகள் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வன்னியில் இடம்பெறுவதால் மத ரீதியான முரண்பா டுகள் ஏற்படுத்தப்படுகின்றன.  

மலைப்பகுதிகள் காணப்படும் இடங்களில்  பௌத்த ஆலயங்களை அமைப்பதும்,  தமிழர்களின் பாரம்பரிய இந்து ஆலயப் பிரதேசங்களை பௌத்த பிரதேசங்களாக மாற்றுவதுமே பாதுகாப்பு திணைக்களம் என்பன தான் தோன்றித்தனமாகச் செயற்பட்டு  பல பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதே சமாக பிரகடனப்படுத்துகின்றன. இதனால் தமிழ் மக்களின் வாழ்வாதார முயற்சிகளுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த மூன்று திணைக்களங்களிலும் பெரும்பான்மை இனத்தவர்களே உயர் அதிகாரிகளாக உள்ளனர். இதனால் தமிழ் மக்களின் வரலாறு மற்றும் உணர்வுகள்  புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.எனவே இத் திணைக்களங்களின் இரண்டாம் நிலை உயர் அதிகாரிகளாக, தமிழர்கள் இருப்பது உறுதி செய்யப்படல் வேண்டும்.  

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்த ஒரு இடத்தையும் தொல்லியல் பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு அல்லது அப்பிர தேசத்தில் தலையிடுவதற்கு முன்பு அந்தந்த பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் மூலம் மாகாண கலாசார திணைக்களப் பணிப்பாளரின் ஒத்துழைப்பை தொல்பொருளியல் திணைக்களம் அவசியம் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றுக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறே,சிவஞானம் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

யாழ்.விசேட நிருபர்   

 

Thu, 12/27/2018 - 09:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை