பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா பிரபஞ்ச அழகியாக மகுடம்

2018ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே மகுடம் சூடியுள்ளார்.

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தில் தென்னாபிரிக்காவின் தமாரின் கிரீனும் மூன்றாம் இடத்தில் வெனிசுவேலாவின் ஸ்டெபனி குட்டியெரஸ்ஸும் தேர்வாகினர்.

67ஆவது முறையாக இடம்பெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் சுமார் 90 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அழகிகள் கலந்துகொண்டனர்.

24 வயதான கிரே அவுஸ்திரேலிய தந்தைக்கும் பிலிப்பைன்ஸ் தாய்க்கும் பிறந்தவராவார். அவர் அவுஸ்திரேலியாவில் வளர்ந்தபோதும் அழகி மற்றும் நடிகையாக பிலிப்பைன்ஸுக்கு இடம்பெயர்ந்தார்.

பிரபஞ்ச அழகிப் போட்டி சர்வதேச அளவில் பெரிதும் பிரபலம் அடைந்திருந்தபோதும் அது பாலின சமத்துவமின்மையை பிரசாரம் செய்வதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

பிரபஞ்ச அழகிப் போட்டி “சதையை காட்சிக்கு வைத்து தகுதியற்ற அழகித் தரத்தை ஏற்படுத்துவதாக செயற்பாட்டாளர்கள் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை