கம்போடியாவில் 3 தொன் யானை தந்தங்கள் பறிமுதல்

கம்போடியாவில் கொள்கலனில் பதுக்கிவைக்கப்பட்ட 3.2 தொன் எடையுள்ள யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆயிரத்துக்கு மேற்பட்ட அந்த யானைத் தந்தங்கள் மொஸம்பிக்கில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவை.

இவ்வளவு அதிகமான அளவில், யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்படுவது கம்போடியாவில் இதுவே முதல்முறையாகும். அமெரிக்க தூதரகம் கொடுத்த உளவுத் தகவலைத் தொடர்ந்து அந்தப் பறிமுதல் சாத்தியமாகியுள்ளது.

கைவிடப்பட்ட கொள்கலனில் பளிங்குக் கற்களின் இடையே தந்தங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. கொள்கலன் கடந்த ஆண்டு கம்போடியத் துறைமுகத்துக்குச் சென்று சேர்ந்ததாக நம்பப்படுகிறது.

விலங்குகளின் உடல் பாகங்களைச் சட்டவிரோதமாகக் கடத்துவது பல பில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தகமாக வளர்ந்து வருகிறது.

சட்டவிரோதமாக வன விலங்குகளும் அவற்றின் உடல் பாகங்களும் கடத்தப்படுவதில் கம்போடியா ஒரு முக்கியத் தளமாக உருவெடுத்து வருகிறது.

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை