2nd Test: AUSvIND; இரண்டாவது போட்டி அவுஸ்திரேலியா வசம்

Azaff Mohamed
இரண்டாவது போட்டி அவுஸ்திரேலியா வசம்-2nd Test AUSvIND-Won by 146

சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 146 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பேர்த் மைதானத்தில் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி இந்திய பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். எனினும் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரினதும் பங்களிப்பின் உதவியுடன் முதல் இன்னிங்ஸுக்காக 326 ஓட்டங்களை குவித்தது. மார்கஸ் ஹெர்ரிஸ் 70 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் 58 ஓட்டங்களையும், ஆரோன் பின்ச் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இஷான்த் சர்மா 4 விக்கெட்டுகளையும் சமி, யாதவ் மற்றும் விஹாரி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 283 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் யாரும் சோபிக்காத நிலையில் அணித்தலைவர் விராட் கோலி பெற்ற சத்த்தின் உதவியுடன் மாத்திரம் இந்திய அணி இந்த ஓட்ட இலக்கை எட்டியது.

பந்து வீச்சில் லியொன் 5 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் மற்றும் ஹசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

36 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸைத்தொடர்ந்த அவுஸ்திரேலியா அணிக்கு ஓட்டக்குவிப்பு அவ்வளவு இலகுவாக அமையவில்லை. அவ்வணி சார்பில் உஸ்மான் கவாஜா 72 ஓட்டங்களைப்பெற்றார்.

பந்து வீச்சில் மொஹமட் சமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

286 எனும் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அவுஸ்திரேலியா அணியின் அபாரமான பந்து வீச்சில்  சிக்கி 140 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்தியா சார்பில் அதிக பட்சமாக ரிசப் பான்ட் மற்றும் ரஹானே தலா 30 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் லியொன் மற்றும் மிச்சல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட்  மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக நதன் லியொன் தெரிவு செய்யப்பட்டார்.

முதலாவது இன்னிங்ஸ்
அவுஸ்திரேலியா 326/10 (108.3)

மார்க்கஸ் ஹென்றிக்ஸ் 70 (141)
ட்ராவிஸ் ஹெட் 58 (80)
ஆரோன் பின்ச் 60 (105)

இஷான்ட் சர்மா 4/41 (20.3)
பும்ரா 2/53 (26)
உமேஷ் யாதவ் 2/78 (23)
விஹாரி 2/53 (14)

இந்தியா 283/10 (105.5)
விராட் கோலி 123 (257)
ரஹானே 51 (105)

லியொன் 5/67 (34.5)
ஸ்டார்க் 2/79 (24)
ஹசல்வுட் 2/66 (21)
கம்மின்ஸ் 1/60 (26)

இரண்டாவது இன்னிங்ஸ்
அவுஸ்திரேலியா 243/10 (93.2)
உஸ்மான் கவாஜா 72 (213)

மொஹமட் சமி 6/56 (24)
பும்ரா 3/39 (25.2)

இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியா 140/10 (56)
ரிஷப் பான்ட் 30 (61)
ரஹானே 30 (47)

லியொன் 3/39 (19)
ஸ்டார்க் 3/46 (17)
ஹசல்வுட் 2/24 (11)
கம்மின்ஸ் 2/25 (9)

Tue, 12/18/2018 - 17:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை