டெஸ்ட் தொடரில் இலங்கை அணி முன்னிலையில்

நடைபெற்றுக்கொண்டிருக்கும் நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் நிறைவான இன்று (18) இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 259 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
 
நேற்றைய தினம் 3ஆம் நிறைவின் போது 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை தடுக்க வேண்டி போராடிய இலங்கை அணிக்கு 4ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த மெத்திவ்ஸ் மற்றும் குசல் மென்டிஸ் ஜோடி மிக நேர்த்தியாக ஆடி நியுசிலாந்து அணி பந்து வீச்சாளர்களின் சகல திட்டங்களையும் தவிடுபொடியாக்கியதுடன் அவர்களின் வெற்றிக்கனவையும் தகர்த்தது.
 
20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இன்றைய 4ஆம் நாளை தொடர்ந்த இலங்கை அணி மெதுவாக ஓட்டக்குவிப்பை ஆரம்பித்தது. இன்றைய தேநீர் இடைவேளையின் போது 197 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்ததுடன் குசல் மெண்டிஸ் 97 ஓட்டங்களுடன் இருந்தார். தேநீர் இடைவேளையின் பின்னர் வோக்னரின் பந்தை பவுண்டரி நோக்கி அனுப்பிய குசல் தனது 6ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய அஞ்சலோ மெத்திவ்ஸ் தனது 9ஆவது சதத்தை பூர்த்தி செய்ததுடன் டிப்ஸ் மூலம் தனது உடல் வலுவை நிரூபித்து சதத்தை கொண்டாடினார்.
 
இன்றை 4ஆம் நாள் முழுவதும் எவ்வித விக்கெட் இழப்புமின்றி துடுப்பெடுத்தாடியதன் மூலம் 10 வருடங்களின் பின் இச்சாதனையை இலங்கை அணி நிலைநாட்டியுள்ளது. முன்னதாக தென்னாபிரிக்க அணி பங்களாதேஷ் அணிக்கெதிராக நாள் முழுவதும் விக்கெட் இழப்பன்றி 405 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மெத்திவ்ஸ் 117 ஓட்டங்களுடனும் மெண்டிஸ் 116 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளதுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டுக்காக 246 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பாட்டமானது இலங்கை அணி சார்பில் 4ஆவது விக்கெட்டுக்காக பெறப்பட்ட இரண்டாவது. அதி கூடிய இணைப்பாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மஹேல ஜயவர்தன மற்றும் திலான் சமரவீர ஜோடி கராச்சியில் பெற்றுக்கொண்ட 437 ஓட்டங்களே 4ஆவது விக்கெட்டுகாக இலங்கை அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக 282 ஓட்டங்களைப் பெற்றதுடன் நியுசிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக 578 ஓட்டங்களையும் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இலங்கை (முதலாவது இன்னிங்ஸ்) - 275/9 (87)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 83(153)
திமுத் கருணாரத்ன 79(144)
நிரோஷன் திக்வெல்ல 73(91)
 
டிம் சவ்தி 5/67 (25)
நெய்ல் வேக்னர் 2/75 (20)
க்ரேன்ட்ஹோம் 1/35 (13)
ட்ரெண்ட் போல்ட் 1/77 (26)
 
நியுசிலாந்து (முதலாவது இன்னிங்ஸ்) 578/10 (157.3)
டொம் லேதம் 264(489)
கேன் வில்லியம்சன் 91(93)
ரோஸ் டெய்லர் 50(88)
ஹென்றி நிக்கோல்ஸ் 50(101)
 
லஹிரு குமார 4/121 (31.3)
தில்ருவன் பெரேரா 2/156 (40)
தனஞ்சய டி சில்வா 2/54 (15)
 
இலங்கை (இரண்டாவது இன்னிங்ஸ்) 259/3 (105)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 117(293)
குசல் மெண்டிஸ் 116(287)
 
டிம் சவ்தி 2/36 (20)
ட்ரெண்ட் போல்ட் 1/50 (21)
Tue, 12/18/2018 - 15:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை