2061ம் ஆண்டில் வானில் தோன்றவுள்ள அற்புதம்!

இரவு வேளையில் வானத்தில் எண்ணிக்ைகயற்ற விண்மீன்கள் பரிணமித்திருப்பதைக் காண்கின்றோம். ஆனால் மிக அரிதாக பல ஆண்டு காலத்திற்கு ஒருமுறை ஆகாயத்தில் வால் நட்சத்திரம் தோன்றி எம்மை வியப்பிற்குள்ளாக்குவதுண்டு.

உலகில் வால்நட்சத்திரம் எதேச்சையாகத் தோன்றினால் நாட்டிற்கு நல்லதல்ல என்ற மூட நம்பிக்கை இன்றும் நிலவுகின்றது.வால்வெள்ளியை ஜோதிடர்கள் தூமகேது என்று அழைப்பதுண்டு.

வால்வெள்ளியில் மூன்று பிரதான பாகங்கள் உள்ளன. இவற்றுள் முக்கியமானது ‘நியூக்கிளியஸ்’ என்றும் கருவாகும். இது திண்ம நிலையில் இல்லாமல் பலகோடிக்கணக்கான துகள்களால் ஆனது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அடுத்ததாக இதனைச் சுற்றி விசாலமான முகில்கூட்டம் சூழ்ந்து காணப்படுகின்றது. மூன்றாவதாக சூரியனின் உந்துவிசையினால் துகள்களின் ஒருபகுதி எதிர்த்திசைக்கு தள்ளப்படுகின்றது. இது கடற்படையினரின் ‘போக்கஸ் லைட்’ மாதிரி தென்பட்டாலும் முடிவில் நீண்டவால் போல் காட்சியளித்து எம்மை அதிசயத்தினுள் ஆழ்த்துகின்றது.

வால்வெள்ளியின் உருவாக்கம் ஏன் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வால் வெள்ளியும் சூரிய குடும்பத்தில் உள்வாங்கப்பட்டு ஏனைய கிரகங்களின் அசைவு விதிகளுக்கு ஏற்ப பரிணாமம் பெற்றுள்ளது. ஆனால் கிரகங்களின் சுற்றுப் பாதைக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் காணப்படுகின்றது.

வெகுதூரத்தில் வலம் வரும் போது இது ஏனைய கிரகங்களைப் போன்ற நிலையில் இருக்கும். சூரியனை அண்மித்ததும் கட்டாயம் இதற்கு ஒரு வால் தோன்றிவிடும். இந்த வாலானது கதிரவனுக்கு எதிர்த்திசையிலே தென்படுகின்றது. சூரியனை விட்டு அகன்றதும் வால் மறைந்து விடும். இந்த வாலின் நிறம் பல இலட்சம் கிலோ மீற்றராகும். சிலவேளைகளில் நாம் வாழுகின்ற பூமியானது இந்த வாலை ஊடறுத்து செல்லும் வாய்ப்புகளும் உண்டு.

சில ஆண்டு காலங்களுக்கு முன்னர் உலகில் தோன்றிய ஹலி என்ற வால் நட்சத்திரத்தின் வாலுக்கு ஊடாக பூமி ஊடறுத்துச் சென்றது. புவிக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை. அச்சமயம் அதன் வாலின் நீளம் மூன்று தசம் ஐந்து கோடி கிலோ மீற்றராகும். துரதிர்ஷ்டவசமாக வால்வெள்ளியின் தலைப்பகுதி பூமியை நெருங்கினால் பூமிக்கு ஆபத்து உண்டாகலாம் என்பது விஞ்ஞானிகளது கூற்றாகும். உலகில் மிகப் பிரகாசமாகத் தென்படுகின்ற வால் வெள்ளி பரவி வால் நட்சத்திரமாகும். இனி வரப்போகும் இரண்டு ஆயிரத்து அறுத்தோராம் ஆண்டும் வானில் ஹலி வால் வெள்ளியைப் பார்வையிடலாம்.

இந்த ​ேஹலி வால்வெள்ளியை ஆசைதீர கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் தற்போது முதியவர்களாக இருப்பவர்களுக்குக் கிட்டாது. ஆனால் தற்சமயம் சிறுவர்களாகவும், இளைஞர்களாகவும் வாழ்பவர்களுக்கு நிச்சயம் இதனை பார்வையிடும் சந்தர்ப்பம் உண்டு.

அருணா தருமலிங்கம்

Sat, 12/22/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை