பிரதமரின் வேண்டுகோளுக்கு அமைய கிராமப்புற போக்குவரத்துக்காக அவிசாவளைக்கு புதிய பஸ்வண்டிகள்


-அமைச்சர் பந்துலவினால் வழங்கி வைப்பு

சீதாவக்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரென்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன விடுத்தவேண்டுகோளுக்கிணங்க அவிசாவளை கிராமப்புற பயணிகளின் போக்குவரத்துக்காக 05 புதிய பஸ்வணடிகள் நேற்று முன்தினம் 27 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் தலைமையில் புதிய பஸ்வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அவிசாவளை டிப்போவினால் புதிய பஸ்வண்டிகள் கிராமப்புற பாதைகளில் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளன.

அவிசாவளையிலிருந்து பொல்லதாவ, அகரவிட ஊடாக ஹன்வெல்ல வரை,கடுகொட ஹங்வெல்ல பாதையில், அவிசாவளையிலிருந்து குடாகம வரை 20 ஏக்கருக்கும், அவிசாவளை, கொஸ்கம, கானாம்பல்ல, ஊடாக பூகொட வரை, அவிசாவளை, இலுக்கோவிட, தும்மோதர, தம்போர, போபே ஊடாக பாதுக்க வரை. மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் லயனல் காரியவசம், சீதாவக்க பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ஜயந்த ரோஹன, பொதுஜன பெரமுன அவிசாவளை அமைப்பாளர் சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க, சீதாவக்க உள்ளூராட்சி மன்ற முன்னாள் மக்கள் பிரதிநிதிகளான யு.ஏ.எச். உபேசிங்க, சமந்த உதய குமார கமகே, நந்த குமாரசிங்க, கோகிலா சம்பத், புத்திக ரூபசிங்க மற்றும் பெருந்தொகையான பிரதேசவாசிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Mon, 05/29/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை