உலகளாவிய மனித மேம்பாட்டில் வீழ்ச்சி

கொரோனா பெருந்தொற்றை அடுத்து பல தசாப்தங்கள் முன்னேற்றம் கண்டு வந்த ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி மற்றும் பொருளாதார சுபீட்சத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 இல் ஒன்பது நாடுகளில் ஐ.நாவின் மனித மேம்பாட்டு சுட்டெண் பின்னோக்கி சரிந்துள்ளது.

கொவிட்–19, உக்ரைன் போர் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலக அபிவிருத்தியில் சரிவு ஏற்படக் காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அப்பால் நல் வாழ்வை அளவிடும் முயற்சியாக 1990இல் மனித மேம்பாட்டு சுட்டெண் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சுட்டெண்ணில் இந்த ஆண்டு ஆயுள் எதிர்பார்ப்பு 84 வயது, ஆண்டின் கல்விக்கான செலவு 16.5 வீதம் மற்றும் சராசரி சம்பளம் 66,000 டொலர்களுடன் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

இந்த அளவீட்டின் கடைசி இடத்தில் இருக்கும் தென் சூடானில் ஆயுள் எதிர்பார்ப்பு 55 வயதாக இருப்பதோடு சராசரியாக மக்கள் பாடசாலையில் 5.5 ஆண்டுகளையே செலவிடும் நிலையில் ஆண்டு ஒன்றில் 768 டொலர்களை மாத்திரமே ஈட்டுகின்றனர்.

இதில் 191 நாடுகளில் பொரும்பாலான நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

“நாம் முன்கூட்டியே மரணிக்கிறோம், நாம் குறைவான கல்வியையே பெறுகிறோம், எமது வருவாய் குறைந்து வருகிறது என்பதே இதன் பொருளாகும்” என்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

Fri, 09/09/2022 - 06:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை