கொழும்பு பங்கு விலை சுட்டெண் அதிகரிப்பு

முதலீட்டாளர்கள் நம்பிக்கை வெளியீடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரசாங்கத்தின் நேர்மறையான கொள்கை விளக்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின் கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி மீண்டும் அந்த அதிகரிப்பு எட்டப்பட்டுள்ளதுடன் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டிகளின் அலகுகளும் 8,000 யும் கடந்துள்ளன.

கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான விலைச்சுட்டெண் அனைத்து விலை சுட்டிகளையும் நேற்றைய தினம் காட்சிப்படுத்தியதுடன் அன்றாட கொடுக்கல் வாங்கல் இறுதியின்படி அலகு ஒன்று 8,229.14 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று முன்தினத்தோடு அதனை ஒப்பிடுகையில் அதன் அலகு 149.00 ஆக அதிகரித்துள்ளது. அது நூற்றுக்கு 1.84 அதிகரிப்பை காட்டுகின்றது.

அத்துடன் S & P SL20 சுட்டியானது நேற்றைய தினத்தில் அலகு ஒன்று 91.62 ஆக அதிகரித்ததுடன் நேற்றைய தினத்தின் இறுதியில் அலகு ஒன்று 2,677.67 ஆக பதிவாகியிருந்தது. அது நேற்று முன்தினத்தோடு ஒப்பிடுகையில் 3.54 அதிகரிப்பாகும்.

அதேவேளை, நேற்றைய தினம் 3.79 பில்லியன் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 08/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை