தாயின் காரை ஓட்டிய நான்கு வயது சிறுவன்

நெதர்லாந்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் காரை ஓட்டிச் சென்று அதனை நிறுத்தி இருந்த கார்கள் மீது மோதவிட்டுள்ளான்.

அந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை இரவு வாகனத் தரிப்பிடத்தில் இருந்த இரு கார்கள் மீது மோதவிட்டபின், இரவு ஆடையுடன் வெறுங்காலோடு அங்கிருந்து வெளியேறி சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளிருக்கு மத்தியில் வீதியில் தனியாகச் செல்லும் அந்த சிறுவனை கண்ட பாதசாரிகள் பொலிஸாரை அழைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

அங்கு விரைந்த பொலிஸார் சிறுவனின் தாயாரை தொலைபேசியில் அழைத்து, சிறுவனை பேசவைத்தபோது அவன், கார் செயல்படும் சத்தங்களை எழுப்பியதாகவும் காரின் திருப்பு வளையத்தைத் திருப்புவதுபோல் சைகை காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் அந்தக் காரை சிறுவனே செலுத்தி இருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

Tue, 05/03/2022 - 07:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை