புழுதிப்புயல் தாக்கி ஈராக்கில் 1,000 பேர் மருத்துவமனையில்

ஈராக்கில் கடந்த ஒரு மாதத்தில் ஏழாவது முறையாகவும் தாக்கிய புழுதிப் புயல் காரணமாக சுவாசப் பிரச்சினையால் 1,000க்கும் அதிகமானவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈராக்கின் 18 மாகாணங்களில் தலைநகர் பக்தாத் மற்றும் பரந்த மேற்குப் பிராந்தியமான அல் அன்பார் உட்பட ஆறு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் வானத்தை சூழ்ந்த அடர்ந்த தூசி மேகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களை வீடுகளில் இருக்கும்படி தலைநகரின் வடக்கில் உள்ள கிர்குக் மற்றும் அல் அன்பார் மாகாண நிர்வாகங்கள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளன.

ஈராக் மோசமான காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் அங்கு குறைந்த மழைவீழ்ச்சி மற்றும் அதிக வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளது. இது போரால் பாதிக்கப்பட்ட அந்த நாடு சமூக மற்றும் பொருளாதார பேரழிவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக அவதானிகள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் 2050 ஆம் ஆண்டாகும்போது ஈராக்கின் நீர் வளங்கள் 20 வீதம் வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக உலக வங்கி கடந்த நவம்பரில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 05/06/2022 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை