பாராளுமன்றம் இன்று கூடும்

பாராளுமன்றம் இன்று முதல் 4 தினங்கள் கூட உள்ளது. இன்று மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவிருப்பதுடன், மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாவது மதிப்பீடு) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.அத்துடன், மார்ச் 09ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மார்ச் 10ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பி.ப 12.30 மணி வரை வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன் பின்னர் மதிய போசன இடைவேளை இன்றி பி.ப 12.30 முதல் பி.ப 5.30 மணிவரை நாட்டில் நிலவும் எரிசக்திப் பிரச்சினை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு நேரம் ஒதுக்குவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதேநேரம், மார்ச் 11ஆம் திகதி மு.ப 10.00 மணி முதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. (பா)

Tue, 03/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை