"பைசர்" தடுப்பூசியை பெற மக்களுக்கு வாய்ப்பு

-பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி

முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவிக்கையில்;

சிறுவர்கள் தவிர்ந்த ஏனையோர் முதலாம் மற்றும்இரண்டாம் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்பினால் அதற்கான வாய்ப்பை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

இதுவரை 3 வது தடுப்பூசியாக மாத்திரமே பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்துள்ளது. சில நாடுகளுக்கு பயணிக்கும் போது பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளமை விசேடமாக கணக்கலெடுத்துக்கொள்ளப்பட்டு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது நாட்டில் கையிருப்பிலுள்ள பைசர் தடுப்பூசிகளில் பெரும்பாலானவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் காலாவதியாக உள்ளவையாகும் .என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒரு கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 76 இலட்சம்பேருக்கு மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கொரோனா வைரசுக்காக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு முன்வருவோரின் தொகை மிகக்குறைவாகவே காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 03/29/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை