நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலிலிருந்து இன்று விடுவிக்கப்படாவிட்டால் மீண்டும் கேஸ் தட்டுப்பாடு வரலாம்

லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவிப்பு  

துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலிலிருந்து இன்றைய தினத்திற்குள் சமையல் எரிவாயுவை விடுவித்துக் கொள்ள முடியாமற்போனால், நாட்டில் மீண்டும் பாரிய கேஸ் தட்டுப்பாடு உருவாகும் என லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இறுதியாக கப்பலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள எரிபொருள் தொகை இன்றைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் அன்றாட சமையல் எரிவாயுவின் தேவை 1,100மெற்றிக் தொன் ஆக உள்ள நிலையில், கப்பலிலிருந்து இறுதியாக 3600மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு விடுவிக்கப்பட்டுள்ளது. இது மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அன்றாடம் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 80.000 தேவைப்படுவதாகவும் 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 15,000 தேவைப்படுவதாகவும் அத்துடன் 2.3 கிலோகிராம் ரக எரிவாயு சிலிண்டர்கள் 16,000 தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்) 

 

Mon, 03/14/2022 - 08:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை