புகையிரதம் - டிப்பர் விபத்து; சாரதி படுகாயம்; புலதிசி ஸ்தம்பிதம்

புகையிரதம் - டிப்பர் விபத்து; சாரதி படுகாயம்; புலதிசி ஸ்தம்பிதம்-Tipper-Train Accident-Pulathisi Intercity Train Derailment

புகையிரதம் - டிப்பர் வண்டியும் மோதியதில் டிப்பர் சாரதி படுகாயமடைந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புலதிசி கடுகதி புகையிரதத்துடன் டிப்பர் வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

புகையிரதம் - டிப்பர் விபத்து; சாரதி படுகாயம்; புலதிசி ஸ்தம்பிதம்-Tipper-Train Accident-Pulathisi Intercity Train Derailment

நேற்று சனிக்கிழமை (05) வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தமடு பகுதியில் வைத்து, கடவத்தமடு பகுதியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு பிரதான வீதிக்கு சென்ற டிப்பர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

புகையிரதம் - டிப்பர் விபத்து; சாரதி படுகாயம்; புலதிசி ஸ்தம்பிதம்-Tipper-Train Accident-Pulathisi Intercity Train Derailment

இவ்விபத்தில் டிப்பர் கடும் சேதமடைந்துள்ளதுடன், புகையிரத வண்டியும் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்பு புகையிரத சேவைகள் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

புகையிரதம் - டிப்பர் விபத்து; சாரதி படுகாயம்; புலதிசி ஸ்தம்பிதம்-Tipper-Train Accident-Pulathisi Intercity Train Derailment

விபத்தில் காயமடைந்த டிப்பர் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புகையிரதம் - டிப்பர் விபத்து; சாரதி படுகாயம்; புலதிசி ஸ்தம்பிதம்-Tipper-Train Accident-Pulathisi Intercity Train Derailment

(எச்.எம்.எம்.பர்ஸான்)

Sun, 02/06/2022 - 06:00

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை