இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்பு

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார்.

இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பெருமையடைவதாக பிரதி இராஜாங்கச் செயலாளர் வெண்டி ஆர். ஷெர்மன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தூதுவர் சுங்கின் தலைமைத்துவம் அமெரிக்க மக்களை பிரதி நிதித்துவப் படுத்துவதற்கும், அமெரிக்க – இலங்கை கூட்டுறவை முன்னேற்றுவதற்கும் அவரை சரியான தேர்வாக ஆக்கியுள்ளது. எங்கள் பணியை ஒன்றாகத் தொடரக் காத்திருக்கிறேன் என பிரதி இராஜாங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Sat, 02/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை