பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிகரிப்பு

அண்மைய தாக்குதல்களில் பாகிஸ்தானில் பல படை வீர்கள் கொல்லப்பட்டிருப்பது அண்டை நாடான ஆப்கானை கடந்த ஆண்டு தலிபான்கள் கைப்பற்றியது தொடக்கம் பாகிஸ்தானில் பயங்கரவாத செயற்பாடுகள் அதிகரித்திருப்பதை காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் மெதுவாக குழப்பம் மற்றும் ஸ்திரமற்ற நிலைக்கு சரிந்து வருவதாக அமைதி ஆய்வுகளுக்கான பாகிஸ்தான் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் இஸ்லாமாபாத், லாஹோர் உட்பட பிரதான நகரங்களை இலக்குவைத்து பலவேறு பயங்கரவாத சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஜனவரி 25 இல் பலுகிஸ்தான், கெச்சில் இடம்பெற்ற தாக்குதலில் 10 பாக். இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரு வாரத்தில் பெப்ரவரி 2 ஆம் திகதி அதே மாகாணத்தின் நொஷ்கி மற்றும் பன்சுர் மாவட்டங்களில் ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று அந்த அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sat, 02/19/2022 - 07:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை