பெப்ரவரி 28 மின்வெட்டு: ABC: 4 மணித் 40 நிமிடங்கள்; PQRSTUVW: 5 மணித் 15 நிமிடங்கள்

பெப்ரவரி 28 மின்வெட்டு: ABC: 4 மணித் 40 நிமிடங்கள்; PQRSTUVW: 5 மணித் 15 நிமிடங்கள்-Power Cut Schedule for Feb 28-PUCSL

நாளையதினம் (28) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாட்டை 11 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரண்டு கட்டங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

அதற்கமைய A,B,C பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய (P,Q,R,S,T,U,V,W) பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 5 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Sun, 02/27/2022 - 15:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை