சர்வமத தூதுக்குழுவினர் பாக். உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

கொலை தொடர்பில் கண்டனமும் தெரிவிப்பு  

சர்வமதத் தலைவர்கள் தூதுக்குழுவினர் நேற்று (6) பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமதை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் சந்தித்தனர். இதன்போது அண்மையில் பாகிஸ்தானில் மிலேச்சத்தனமாக கொலைசெய்யப்பட்ட பொறியியலாளர் பிரியங்க குமார கொலை பற்றி தமது கண்டனத்தையும் கவலையையும் இவர்கள் தெரிவித்தனர்.  

இந் நிகழ்வில் இந்துமத இணைப்பாளர் கலாநிதி பாபுசர்மா, முஸ்லிம் சமய இணைப்பாளர் கலாநிதி ஹசன் மௌலானா, கிறிஸ்தவ மத இணைப்பாளர் கலாநிதி குருக்குலசூரிய மற்றும் பௌத்த மதத்தை சேர்ந்த மதகுருமார்களும் இச் சந்திப்பல் கலந்து கொண்டு தமது கருத்துகளை உயா் ஸ்தானிகரிடம் தெரிவித்தனர்.   கடந்த காலங்களில் பாகிஸ்தான் நாடும் அவ்வப்போது ஆட்சியில் இருந்த தலைவா்களும் இலங்கைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவி வழங்கியதையும் பாகிஸ்தான் இலங்கை நட்புறவுகள் தொடா்ந்தும் பேணப்படல் வேண்டும் என்றும் இவர்கள் கேட்டுக்கொண்டனர். இக்கொலை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் எடுக்கவுள்ள நடவடிக்கையையும் இவர்கள் பாராட்டினர். அத்துடன் கொலைசெய்யப்பட்ட குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதற்கு கனேமுல்லை கிராமத்திற்கு உயர் ஸ்தானிகரை வருமாறும் அவர்கள் அழைப்பும் விடுத்தபோது, அதனை உயர் ஸ்தானிகர் மனப்பூர்வமாக ஏற்றும் கொண்டார். 

(அஷ்ரப் ஏ சமத்) 

 

Tue, 12/07/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை