நிபுணர் குழு அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்தக் குழுவின் உறுப்பினர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி மாலை வரையான காலப்பகுதியிலேயே நாட்டின் பல பகுதிகளிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Mon, 12/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை