தடுப்பூசி பெறாத ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் கடும் எச்சரிக்கை

கொவிட்–19 தடுப்பூசி விதிமுறைகளைப் பின்பற்றாத ஊழியர்கள் வருமானத்தை இழப்பதோடு பணி நீக்கமும் செய்யப்படுவர் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட குறிப்பில் அந்தத் தகவல் இடம்பெற்றிருந்ததாக சி.என்.பி.சி செய்தி நிறுவனம் கூறியது.

ஊழியர்கள் டிசம்பர் 3க்குள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் அல்லது மருத்துவ, சமய விலக்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஜனவரி 18ஆம் திகதிக்குள் அந்தக் கட்டுப்பாடுகளுக்கு இணங்காதோர் 30 நாட்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பில் வைக்கப்படுவர்.

பின்னர் அவர்கள் 6 மாதம் வரை சம்பளமில்லா விடுப்பில் வைக்கப்படுவர். இறுதியாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஊழியர்கள் தங்களது அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யுமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த முயற்சி மீண்டும் மீண்டும் தாமதமாகி வருகிறது. இப்படி அலுவலகத்துக்குத் திரும்புவோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூகுள் எதிர்பார்க்கிறது.

 

Sun, 12/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை