முல்லைத்தீவு கடலில் மூழ்கிய மூவரில் ஒருவர் சடலமாக மீட்பு; இருவரை காணவில்லை

முல்லைத்தீவு கடலில் மூழ்கிய மூவரில் ஒருவர் சடலமாக மீட்பு; இருவரை காணவில்லை-Drown in Sea-Body of a Person Found-3 Missing-Mallaitivu

முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த மூவர் கடலில் மூழ்கிய நிலையில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவரை தேடும் பணி தொடர்வதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு சென்ற நான்கு பேர் முல்லைத்தீவு கடலில் நீராடிய போது அலையில் சிக்கி மூழ்கிய நிலையில் மூவர் காணாமல் போயுள்ளனர்.

அவர்களை தேடியும் காணாத நிலையில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவரை தேடும் நடவடிக்கை தொடர்கிறது. அவர்களுடன் சென்ற பெண் முல்லைத்தீவு பொலிசாரால் அழைத்து செல்லப்பட்டு அவரிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மற்றும் காணாமல் போன இருவரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா விசேட நிருபர்

Sun, 12/05/2021 - 19:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை