"ஒமிக்ரோன்" மாறுபாடு அச்சம்: விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் கோவிட்19மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் உலகின் பல நாடுகளில் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து தப்பிக் கொள்வதற்காக உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.  எனினும் நாட்டை மூடி வைப்பதில் எவ்வித பயனும் இல்லையென பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Wed, 12/01/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை