கொரோனா தொற்றத்தை கண்டறிய முடியவில்லை

அமெரிக்க உளவு அமைப்புகள்

கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து தங்களால் கண்டறிய இயலாது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால் அதே சமயம் கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படவில்லை என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வைரஸ் எங்கிருந்து ஆரம்பித்தது என்ற ஆய்வு குறித்த அண்மைய அறிக்கையில், அமெரிக்க தேசிய உளவு அமைப்பு இயக்குநரகம், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் வந்திருக்கலாம் மற்றும் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்ற இரண்டுமே நம்பத்தகுந்த கருதுகோல்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஒரு முடிவுக்கு வருவதற்கான போதுமான தரவுகள் இல்லை. இந்த அறிக்கையை சீனா விமர்சித்துள்ளது. இந்த முடிவுகள் வகைப்படுத்தப்படாத அறிக்கையில் வெளியாகியுள்ளது. ஓகஸ்ட் மாதம் பைடன் நிர்வாகம் வைரஸின் தோற்றம் குறித்து வழங்கிய அறிக்கைக்கு பின்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

மேலும் வைரஸின் தோற்றம் குறித்த கணிப்பில் உளவு அமைப்புகளுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mon, 11/01/2021 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை