சீனாவில் பாதிக்கும் அதிகமான மாகாணங்களில் கொரோனா

சீனாவில், 24 மணி நேர இடைவெளியில் புதிதாக 80க்கும் அதிகமானோருக்குக் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சீனாவின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களிலும், வட்டாரங்களிலும் அண்மையில் வைரஸ் பரவியது. சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர், ஹெய்லாங்ஜியாங், ஹீபெய் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்.

வைரஸ் பரவலை முறியடிப்பதில் முறையாகச் செயல்படவில்லை என்பதற்காக ஹீபெய் மாகாண தலைநகர் ஷிஜியாசுவாங் அதிகாரிகள் மூவர், பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த வார ஆரம்பத்தில், அந்த நகரில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.

எங்கிருந்து வைரஸ் தொற்று ஆரம்பித்தது என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே, முந்திய வைரஸ் பரவலை விட, தற்போதைய பரவலைக் கட்டுப்படுத்துவது, சிரமமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

வைரஸ் பரவல் இல்லை என்ற அணுகுமுறையைச் சீனா, தற்போது கைவிடக்கூடாது என்று அங்குள்ள சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர்.

மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

 

Sat, 11/06/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை