குறிஞ்சாக்கேணியில் கடற்படை படகு சேவை

நேற்று முதல் முன்னெடுக்கப்படுகிறது

திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு சேவை முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில் இந்தப் படகு சேவை முன்னெடுக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, திருகோணமலை – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து அனர்த்தத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாலத்தின் உரிமையாளர் உட்பட 3 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் திருகோணமலை பிரதான நீதிவான் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (24) பிரசன்னப்படுத்தப்பட்டனர்.இதன்போது குறித்த மூன்று பேரையும் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Fri, 11/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை