தென்கிழக்காசிய விளையாட்டுகள் 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும்

வியட்நாமில், இந்த ஆண்டு நடைபெறத் திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 12ஆம் திகதி முதல் மே 23ஆம் திகதி வரை, போட்டிகள் நடைபெறும்.

அந்நாட்டின் ஒலிம்பிக் குழு அதனைத் தெரிவித்தது.

அறிவிக்கப்பட்ட புதிய திகதிகளில், பெரிய அளவிலான மற்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள், இம்மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 2ஆம் திகதிவரை நடைபெறவிருந்தன.

ஆனால், போட்டிகள் நடைபெறவிருந்த பல மாநிலங்கள், கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்டதை அடுத்து, போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

வியட்நாம், கடைசியாக 2003ஆம் ஆண்டு, தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்தியது.

போட்டிகளில் 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7,000 விளையாட்டு வீரர்கள் உட்பட கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sat, 11/20/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை