மொகலாயர் காலத்து பொக்கிஷங்கள் ஏலம்

அடையாளம் காணப்படாத இந்தியாவின் பொக்கிஷங்களான ஒரு ஜோடி அரிய வைரம் மற்றும் மரகதக் கண்ணாடிகள் இந்த மாதம் பிற்பகுதியில் லண்டனில் ஏலம் விடப்படவுள்ளன.

இந்த கண்ணாடி வில்லைகள் 1890 காலப்பகுதியில் முகலாய காலத்து சட்டகங்களில் வைக்கப்பட்டிருந்ததாக சோதபிஸ் ஏல நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மூக்குக் காண்ணாடிகள் ஒவ்வொன்றும் 2 மில்லியன் தொடக்கம் 3.4 மில்லியன் டொலர்கள் வரை ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏல விற்பனைக்கு முன்னதாக இந்தக் கண்ணாடிகள் ஹொங்கொங் மற்றும் லண்டனில் முதல் முறையாக காண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

இந்த மூக்குக் கண்ணாடிகள் யார் பொறுப்பில் உள்ளது என்பது தெரியாதபோதும், இவை 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் துணைக்கண்டத்தில் ஆட்சி புரிந்த முகலாயர்களுக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது. முகலாயர் காலத்தில் கலை மற்றும் கட்டடக் கலை இந்தியாவில் வளர்ச்சி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் வைரம் மற்றும் மரகதம் முக்குக் கண்ணாடி வடிவத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக சோதபிஸ் ஏல நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆபரணக் கற்களின் தரம் மற்றும் தெளிவு ஆகியவை அசாதாரணமாக உள்ளன. இவ்வளவு பெரிய அளவில் இருக்கும் இந்த கற்கள் நிச்சயமாக ஒரு பேரரசரின் இருப்பில்தான் இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அந்த நிறுவனத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 10/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை