இலங்கை விமானப்படையினால் இயற்கை உர உற்பத்தி வன்னியில் ஆரம்பம்

இலங்கை விமானப்படையினால் இயற்கை உர உற்பத்தி வன்னியில் ஆரம்பம்-Organic Fertilizer Production-Air Force-Sri Lanka

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் "பசுமையான நாடு நச்சுத்தன்மை இல்லாத எதிர்காலம்" எனும் எண்ணக்கருவின் கீழ் இராசயன உரங்களை பயன்படுத்தாது இயற்கை முறையில் உரங்களை பயன்படுத்தி விவசாய உறபத்திகளை மேற்கொள்ள இயற்கை உரம் தயாரிக்கும் வேலைத்திட்டம் இலங்கை விமானப்படையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையினால் இயற்கை உர உற்பத்தி வன்னியில் ஆரம்பம்-Organic Fertilizer Production-Air Force-Sri Lanka

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவின் ஆலோசனைப்படி வன்னி விமானப்படை ரெஜிமென்ட் பயிற்சி பாடசாலையில் விமானப்படை தளபதியின் பங்கேற்பில் நேற்றுமுன்தினம் (22) ஆரம்பிக்கப்பட்டது.

விமானப்படை கட்டளை விவசாயப் பிரிவின் முழு அர்பணிப்பணிப்பான சேவையின் கீழ் முதல்கட்டமாக 25 தொன் இயற்கை உர உற்பத்திக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் தொடர்ந்தும் உற்பத்திகளை அதிகரிக்கும் வேலைத்திட்டம்கள் மேற்கொள்ளப்படும்.

இலங்கை விமானப்படையினால் இயற்கை உர உற்பத்தி வன்னியில் ஆரம்பம்-Organic Fertilizer Production-Air Force-Sri Lanka

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உரம்கள் விமானப்படை வேளாண்மை பிரினால் மேற்கொள்ளப்படும் வேளாண்மை உற்பத்திகளுக்கும் விவசாய அமைச்சின்கீழ் விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இலங்கை விமானப்படையினால் இயற்கை உர உற்பத்தி வன்னியில் ஆரம்பம்-Organic Fertilizer Production-Air Force-Sri Lanka

இந்த ஆரம்ப நிகழ்வில் விமானப்படை கட்டளை விவசாயப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் வன்னி விமானப்படை விமானப்படைத்தள கட்டளை அதிகாரி உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை விமானப்படையினால் இயற்கை உர உற்பத்தி வன்னியில் ஆரம்பம்-Organic Fertilizer Production-Air Force-Sri Lanka

Sun, 10/24/2021 - 15:28

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை