மீலாதுன் நபி கொண்டாட்டங்கள் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும்

இது சிறந்த வாய்ப்பு என அலிசப்ரி மீலாதுன் நபி வாழ்த்து

அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு அரிய சந்தர்ப்பமாக மீலாதுன் நபி கொண்டாட்டங்கள் இருப்பதால், எமது இலக்குகளை அடைய இது எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குமென நீதி அமைச்சர் அலி சப்ரி விடுத்துள்ள மீலாத் தின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்லின மத மக்கள் வாழும் நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வுக்கான அடித்தளமான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம்  அளிக்கும் நபியின் போதனைகள் குறித்து மக்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒரு சந்தர்ப்பமாக இந்த தினம் அமைந்துள்ளது . மக்கா வெற்றியின் போது, அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த நிலையில் அவர் நடந்துகொண்ட விதம் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

"மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள அனைத்து வேறுபாடுகளையும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான அனைத்து வெறுப்புகளையும் நான் என் காலடியில் மிதிக்கிறேன் என்பது அவரது போதனையாகும்.

உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் மனிதகுலத்தின் சமத்துவ கோட்பாடுகளுக்கும் மனிதகுலத்தின் சமூக மேம்பாட்டிற்கும் முஹம்மது நபியின் பங்களிப்பு அளப்பறியது.

30 வருட இன மோதல்களில் இருந்து மீண்டு, நாம் இப்போது ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியின் பாதையில் முன்னேறி வருகிறோம்.

நபிகள் நாயகம் மற்றும் மற்ற ஏனைய மதத் தலைவர்களின் போதனைகளுக்கு ஏற்ப மக்களிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் ஒரு நல்லிணக்க செயல்முறையாக நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

சகிப்புத்தன்மை, பரஸ்பர புரிதல் மற்றும் அனைத்து மதக் குழுக்களுக்கிடையேயான ஒத்துழைப்பும் இலங்கை தேசத்தை வளர்ந்த நாடாக உயர்த்துவதற்கு பங்களிக்கும். அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு அரிய சந்தர்ப்பமாக மீலாதுன் நபி கொண்டாட்டங்கள் இருப்பதால், எமது இலக்குகளை அடைய இது எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்.

அனைவருக்கும் இனிய மீலாத்-உன்-நபி விழா வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 10/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை