20 - 30 வயது பல்கலை மாணவர் தடுப்பூசி; வெள்ளி வரை தொடரும்

20 - 30 வயது பல்கலை மாணவர் தடுப்பூசி வெள்ளி வரை தொடரும்-Vaccination for Unversity Students 20-30 Years

நாட்டில் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று (11) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரம், நாட்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tue, 10/12/2021 - 11:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை