அதிக கடன் சுமை கொண்ட 10 நாடுகள் பெயர் வெளியீடு

உலக அளவில் அதிக கடன் சுமை கொண்ட முதல் 10 நாடுகளின் பெயரை  உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான சர்வதேசக் கடன் சுமை குறித்த புள்ளிவிபர அறிக்கையை உலக வங்கி  வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், அங்கோலா, பங்களாதேஷ், எத்தியோப்பியா, கானா, கென்யா, மங்கோலியா, நைஜீரியா, பாகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், ஜாம்பியா ஆகிய நாடுகள் கடன் சுமை அதிகம் கொண்டுள்ள முதல் 10 நாடுகளாக உள்ளன.

வெளிநாட்டு வங்கிகளில் இந்த நாடுகளுக்கு அதிக கடன் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு அந்தக் கடன்களைத் தற்காலிகமாக ரத்து செய்யும் நடைமுறைக்கு அந்த நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

2020ஆம் ஆண்டு இந்த நாடுகளின் மொத்தக் கடன் இருப்பு 509 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இது 12 வீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 10/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை