பால் மா விலைகள்: 1 கிலோ ரூ. 250; 400g ரூ. 100 இனால் அதிகரிப்பு

Milk Powder Prices Increased-1kg-Rs 250-400g-Rs 100

- புதிய விலை 1kg - ரூ. 1,195; 400g - ரூ. 480

இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் விலைகளை இன்று (09) முதல் அதிகரிக்க, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் மற்றும் உச்சபட்ச சில்லறை விலைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வரத்தமானிகளிலிருந்து அவற்றை அரசாங்கம் நீக்கியதைத் தொடர்ந்து பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கான பால் மா, முழு ஆடைப் பால் மா, கொழுப்பு நீக்கப்பட்ட பால் மா ஆகிய அனைத்து வகை பால் மாக்களும் குறித்த கட்டுப்பாட்டு விலைகள்/ நியமப் பொருட்கள்/ றிப்பிட்ட பொருட்கள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,

  • 1 கி.கி. பால் மா: ரூ. 250 இனால் அதிகரிப்பு - புதிய விலை ரூ. 1,195
  • 400 கி. பால் மா: ரூ. 100 இனால் அதிகரிப்பு - புதிய விலை ரூ. 480

என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Sat, 10/09/2021 - 10:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை